485. மும்பை பயங்கரம் பாகிஸ்தான் நடத்திய வெள்ளோட்டம்
மும்பைத் தாக்குதலின் பின்னணியில் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம். நான் propose செய்யும் தியரி இது! வாசியுங்கள்!
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் ஒரு வெள்ளோட்டம் / பரிசோதனை முயற்சி. பாகிஸ்தான் அரசு, ராணுவம், ஐ.எஸ்.ஐ திட்டமிட்டு நடத்திய ஒரு பரிசோதனை முயற்சி.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடியான போர் என்று வந்தால் பாகிஸ்தான் தோற்கும் என்பது பாகிஸ்தானின் ராணுவ திட்டமிடுபவர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம். இந்திய ராணுவத்தின் ஏராளமான போர்வீரர்கள் உள்ளே புகுந்தால் பாகிஸ்தான் காலி.
ஆனால், பாகிஸ்தான் கமோண்டோ குழுக்களை உருவாக்கி அவற்றை இந்தியாவின் பல நகர்களெங்கும் அனுப்பி இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கலாமா என்று அறியும் முயற்சி இது.
இது வேண்டுமென்றே பாகிஸ்தானிய கமோண்டோக்கள் எல்லோரையும் பலிகொடுப்பதாக வரையப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் முக்கிய இடங்களை ஆக்கிரமித்து தொடர்ந்து அந்த இடங்களை கைப்பற்றி வைத்திருக்கவும், அதன் மூலம் மிரட்டவும் இயலும்.
இந்தியா போர் என்று வந்தால், ஏராளமான கமோண்டோக்கள் இந்தியாவுக்குள் வருவார்கள். சென்னை மும்பை கல்கத்தா டெல்லி ஆகியவற்றின் முக்கிய இடங்களை இதுபோல கைப்பற்றுவார்கள். பாராளுமன்றம் தாக்கப்படும்.
இதுதான் அந்த பரிசோதனை முயற்சி என்றால், பாகிஸ்தானின் திட்டம் வெற்றி என்றே கொள்ளலாம். மூலைக்கு மூலை இந்தியாவில் கமோண்டோக்களை நிறுத்த முடியாது.
10 பேர்கள் செய்தவற்றை தடுக்க, நிறுத்த 3 நாட்களுக்கு மேல் ஆனது. இந்த பத்து பேர்களும் நான்கு இடங்களில் இருந்துள்ளர்கள். அங்கங்கு வெடிகுண்டுகள். ரயில் நிலையத்தில் சரமாரியாக சுடுவது. தாஜ் ஹோட்டல் ஆக்கிரமிப்பு (இது எதிர்காலத்தில் ஆல் இந்தியா ரேடியோ அல்லது வேறொரு முக்கிய அரசாங்க இடமாக இருக்கலாம். சட்டசபை வளாகம், போலீஸ் கமாண்ட் செண்டர் ஆகியவை). ஒவ்வொரு இடத்திலும் 2 அல்லது மூன்று பேரே இருந்திருக்கிறார்கள். அவர்களால் நூற்றுக்கணக்கான என்.எஸ்.ஜி கமோண்டோக்களை மூன்று நாள் தாக்குபிடிக்க முடிந்திருக்கிறது.
இதற்கு பதில்களும் பாகிஸ்தான் அரசாங்கத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டவை போலத்தான் தோன்றுகிறது. இந்த இடத்தில் வழக்கம்போல அனுதாபமும், non state actors என்ற பல்லவியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அனுதாபத்துடன் போர் சூழ்நிலையை தவிர்க்க உடனே பாகிஸ்தான் தயார் நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்ப ஆரம்பித்து விட்டது. இதுதான் பாகிஸ்தானின் திட்டம் என்றால், இந்தியா மிகவும் சிக்கலில் உள்ளது என்பது வெளிப்படை.
இஸ்ரேல் தன்னை விட பெரிய அரபு நாடுகளை வெற்றி கொண்டது போல பாகிஸ்தான் இந்தியாவை வெற்றி கொண்டதும் வரலாற்றில் எழுதப்பட சாத்தியம் உள்ளது.
5 மறுமொழிகள்:
test ...
ஏற்கனவே பாக்கிஸ்தானால் திட்டமிடப்பட்டதோ இல்லையோ, ஆனால் பாக்கிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இந்த சம்பவத்தை கேஸ் ஸ்டடி செய்வார்கள்...
போர் என்று வந்தால் இதே முறையை கையாண்டு ஆயிரம் பேரை வைத்து முழு இந்தியாவையும் ஸ்தம்பிக்க வைக்கமுடியும் என்று திட்டமிடுவார்கள்.
இந்தியா ஒரு ஜுஜுபி என்ற எண்ணம் இப்போதே அவர்களுக்கு தோன்றியிருக்கும்...
உடனடீ நடவடிக்கை இல்லை என்றால் உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுணிவே !!!
பாலா!
இதுதான் கோயப்பல்ஸ் பானி.
தொடரட்டும் உமது பணி.
ரவி!
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த முறையிலான தாக்குதல் ஒரு இத்துப்போன முறை...காஷ்மீரில் பல முறை இதுபோல நடந்துள்ளது. இந்த முறை தாஜ் என்பதால் இனப்பாசத்தோடு மீடியா நான் ஸ்டாப் கவரேஜ் செய்து வெற்றிக்கணியை பறித்து தீவிரவாதிகள் கையில் கொடுத்தார்கள்....
மற்றபடி அர்பன் வார்பேரில் இராக்கிய கொரில்லாக்கள் அமெரிக்காவின் டவுசரை கிழிக்கும்பொழுது இந்தியா எம்மாத்திரம்...
வினவு சொல்லியிருப்பதைபோல வாய்க்கரிசி போட்டுக் கொண்டு வந்த தீவிரவாதியை பொடாவை கொண்டு வந்தா அடக்கமுடியும். இவ்வளவு காலமாகியும் காஷ்மீரிலும் வடகிழக்கு மாகாணத்திலும், ஈழத்திலும் வறாத தலைகுனிவா இந்தியாவுக்கு வந்துவிட போகிறது.
வித்தியாசமான சிந்தனையாக இருந்தாலும் பயமாகத்தான் இருக்கு
Large scale urban warfare can be countered either by using heavy bomnbardment of the occupied building with tanks which will increase civilian casualties and damage to buildings or by releasing poison gases inside occupied buildings.
This will be a self defeating strategy fot pakistan as they may have to intensively train 1000s of commandos for suicide missions for years together to achieve some tangible success.
Post a Comment